எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த சதி: மத்திய அரசு மீது மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம்
12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மேலவையில் மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டாத எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் நடப்பு குளிர் கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆறு காங்கிரஸ் எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவ சேனா கட்கியை சேர்ந்த தலா இரண்டு எம்.பி.க்கள்., இரண்டு இடது சாரி கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, 12 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. போராட்டங்களும் நடத்தி வருகின்றன. ஆனால், சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்படவில்லை.
இதனால், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு 4 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி என மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே விமர்சித்துள்ளார்.
மேலும், சஸ்பெண்ட் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.
Related Tags :
Next Story