எதிர்க்கட்சிகள் அமளி; மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு
12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் மற்றும் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று காலை மாநிலங்களவை கூடியதும் லக்கிம்பூர் கேரி மற்றும் கடந்த கூட்டத்தொடரின் போது அவை நடவடிக்கையில் இடையூறு செய்தற்தாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவை நடவடிக்கைகள் தடை பட்டு 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 2 மணிக்கு அவை கூடியதும் லகிம்பூர் கேரி வன்முறை, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவாரத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுப்பின. இதனால், மாநிலங்களவையை மாலை 3 மணி வரை மீண்டும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story