பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பால் அரசுக்கு கூடுதல் செலவு: நிர்மலா சீதாராமன்


பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பால் அரசுக்கு கூடுதல் செலவு: நிர்மலா சீதாராமன்
x

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பண வீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்து இருப்பதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்று  மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பண வீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. ஆனால், தற்போது 6 சதவிகிதம் என்ற அளவில் தான் உள்ளது. 

வங்கி கடனை திரும்பிக் கட்டாமல் நாட்டை விட்டு தப்பியோடியவர்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு நிதி பொதுத்துறை வங்கிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில அரசிடம் கணிசமான அளவு பண இருப்பு உள்ளது. இரண்டு  மாநிலங்களிடம் மட்டுமே பண இருப்பு எதிர்மறையாக உள்ளது” என்றார். 


Next Story