டெல்லி: ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு


டெல்லி:  ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Dec 2021 2:45 PM IST (Updated: 20 Dec 2021 3:36 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இன்று உறுதியான நிலையில், மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்து உள்ளது.





புதுடெல்லி,

இந்தியாவில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதும், ஊரடங்கு நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தியது.  எனினும், முதல் அலையை விட நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட 2வது அலையில், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டது.  இதற்கு டெல்டா வகை கொரோனா காரணம் என கூறப்பட்டது.  2வது அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.

இந்நிலையில், கொரோனாவின் உருமாற்றம் பெற்ற புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 60  நாடுகளுக்கும் கூடுதலாக பரவி உள்ளது.  மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.  ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நுழைந்தது.

இவற்றில், டெல்லியில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் சீராக உயர்ந்து வருகிறது.  இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் அரசு மருத்துவமனை ஒமைக்ரான் பாதிப்புக்கான சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, 4 தனியார் மருத்துவமனைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் சிகிச்சை அளிப்பதற்கான மையங்களாக மாற்றப்பட்டு உள்ளது.  இந்நிலையில், டெல்லியில் 4 பேருக்கு இன்று ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால், ஒமைக்ரான் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை டெல்லியில் 28 ஆக உயர்வடைந்து உள்ளது.



Next Story