கொரோனா தடுப்பூசி; முதல் தவணை-88%, 2வது தவணை 58%: மத்திய மந்திரி தகவல்


கொரோனா தடுப்பூசி; முதல் தவணை-88%, 2வது தவணை 58%:  மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2021 10:24 AM GMT (Updated: 20 Dec 2021 10:24 AM GMT)

நாட்டில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை-88% மற்றும் 2வது தவணை 58% வரை செலுத்தப்பட்டுள்ளது.



புதுடெல்லி,


நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  மக்களும் இதனை பயன்படுத்தி கொள்கின்றனர்.  புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகளும் பரவலாக அதிகரித்து வருகின்றன.

அதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேலவையில் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று பேசும்போது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நம்முடைய சுகாதார பணியாளர்களின் முயற்சியால் நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை-88% வரை செலுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதேபோன்று இந்தியாவில், 2வது தவணை தடுப்பூசி 58% வரை செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் பெருமளவிலானோர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.




Next Story