4 நாள் பயணமாக நாளை கேரளா செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக கேரளா செல்ல உள்ளார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை முதல் (டிசம்பர் 21) 4 நாள் பயணமாக கேரளா செல்ல இருக்கிறார். இதனை ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது. அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
ஜனாதிபதி, காசர்கோட்டில் உள்ள கேரள மத்திய கல்லூரியின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்னர் டிசம்பர் 22 அன்று கொச்சியில் தெற்கு கடற்படை செயல்பாட்டுகளை பார்வையிட உள்ளார். பின்னர் டிசம்பர் 23 அன்று திருவனந்தபுரத்தில் பி.என்.பணிக்கரின் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
Related Tags :
Next Story