பெட்ரோல், டீசல் விற்பனை: ரூ.17 ஆயிரம் கோடி வரி வசூலித்து தமிழக அரசு சாதனை..!!
பெட்ரோல், டீசல் விற்பனையில் ரூ.17 ஆயிரம் கோடி வரி வசூலித்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி, மாநிலங்களவையில் நேற்று கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைத்த வரி வருவாய் விவரங்களை கேள்வி ஒன்றுக்கு பதிலாக அளித்தார்.
இதன்படி கடந்த 2020-2021-ம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு வரியாக வசூலித்த தொகை ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்து 69 கோடி என தெரியவந்துள்ளது.
இதைப்போல இதே நிதியாண்டில் விற்பனை வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரியாக தமிழக அரசு ரூ.17 ஆயிரத்து 63 கோடியை திரட்டி உள்ளது. புதுச்சேரி ரூ.10 கோடியை வசூலித்து இருக்கிறது. மாநிலங்களை பொறுத்தவரை வரிவசூலில் மராட்டியம், உத்தரபிரதேசத்தை அடுத்து தமிழகம் அதிக வரியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story