டெல்லியில் மிக மோசம் பிரிவில் காற்று தர குறியீடு
டெல்லியில் கடுங்குளிர் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் காற்றின் தரம் மிக மோசமடைந்து 316 ஆக உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதற்குள், மக்களை கடும் குளிர் வாட்டி வருகிறது.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே. ஜெனாமணி கடந்த இரு நாட்களுக்கு முன் கூறும்போது, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் வடக்கு மற்றும் உத்தர பிரதேசம் மேற்கு மற்றும் மத்திய பிரதேசம் வடக்கு உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வருகிற 21ந்தேதி வரை கடுங்குளிர் நிலவும் என கூறினார்.
இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது. காற்றின் தர குறியீடு 316 ஆக உள்ளது. காற்று மாசுபாட்டால் கடந்த சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் அதுபற்றிய வழக்கு விசாரணை நடந்தது.
காற்று மாசுபாட்டை குறைக்க எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து உள்ளது. இதேபோன்று மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மோசம் என்ற பிரிவில் உள்ளது.
Related Tags :
Next Story