நீட் விலக்கு; தமிழக எம்.பி.க்கள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு


நீட் விலக்கு; தமிழக எம்.பி.க்கள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 21 Dec 2021 12:32 PM IST (Updated: 21 Dec 2021 4:11 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றதின் இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 


கடந்த டிசம்பர் 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்  நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வருகை குறித்து கவலை தெரிவித்த அவர், அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் விரைவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரித்திருந்தார்.மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்து பா.ஜ., உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில்  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். 

தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக  மக்களவை பிற்பகல்  2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியை தொடர்ந்து மாநிலங்களவையும் பிற்பகல்  2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story