பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தும் மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு...!
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தும் குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதா 2021 மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கு காங்கிரஸ், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்), திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த மசோதா குறித்த விவாதத்தின் போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, யாருடனும் கலந்து ஆலோசிப்பதில் மத்திய அரசுக்கு நம்பிக்கை இல்லை. இது (குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதா 2021) போன்ற மிகவும் முக்கியமான மசோதா நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுவுக்கு அனுப்புவது முக்கியமாகும். அவர்கள் இந்த மசோதாவை ஆய்வு செய்து மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் பின்னர் மசோதாவை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவார்கள்’ என்றார்.
இந்நிலையில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்து மசோதாவை உரிய ஆய்வுக்கு பின்னரே கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிலைக்குழுவின் பரிசீலனைக்கு பின்னர் மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
Related Tags :
Next Story