நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சஸ்பெண்ட்


நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 21 Dec 2021 7:13 PM IST (Updated: 21 Dec 2021 7:13 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் அவை நடத்தை விதிகளை மீறியதால் நடப்பு கூட்டத்தொடரில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று தேர்தல் சட்டத்திருந்த மசோதா 2021 நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர்.

அப்போது, எதிர்க்கட்சிகளில் ஒன்றான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரிக் ஒ பிரையன் அவை விதிகள் அடங்கிய புத்தகத்தை அங்கிருந்த இருக்கையில் வீசினார். அதன் பின்னர் அவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில், அவை விதிகள் புத்தகத்தை வீசி அவை நடத்தை விதிகளை மீறியதாக நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து டெரிக் ஒ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் நாளையுடன் (டிசம்பர் 22) முடிவடைய உள்ளதால் டெரிக் ஒ பிரையன் நாளை மட்டும் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story