வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்துக்கு லட்சத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு
வெள்ளிக்கிழமை விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என லட்சத்தீவு எம்.பி தெரிவித்துள்ளார்.
கவார்ட்டி,
பல நாடுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் லட்சத்தீவு பகுதியில் அதிகமாக இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் அங்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் லட்சத்தீவில் இனி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என்று லட்சத்தீவு கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி லட்சத்தீவுகளில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாட்கள் என்றும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் இனி விடுமுறை என்று அறிவிக்கும் புதிய நாள் காட்டியை லட்சத்தீவு கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு லட்சத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லட்சத்தீவு எம்.பி பிபி முகம்மது பைசல் இவ்விவகாரம் பற்றி கூறுகையில், “ வெள்ளிக்கிழமை விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது.
லட்சத்தீவில் பள்ளிகள் தொடங்கப்பட்ட காலம் முதலே வெள்ளிக்கிழமை தான் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளிடமோ, தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடமோ இவ்விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. யூனியன் பிரதேசத்தின் தன்னிச்சையான முடிவாக இதை பார்க்கிறோம்” என்றார்.
Related Tags :
Next Story