சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜைக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 11 ஆம் தேதி முதல் பம்பை நதியில் குளிக்கவும், முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், நீலிமலை பாதை திறக்கப்பட்ட நிலையில், எருமேலியிலிருந்து சபரிமலைக்கு செல்லும் வனப்பாதையும் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் பக்தர்களின் வருகை கணிசமாக உயர்ந்த நிலையில், மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் ஐந்து நாட்களே இருப்பதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story