2021ல் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட சிக்கன் பிரியாணி, சமோசா
இந்தியாவில் 2021ல் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சிக்கன் பிரியாணி, சமோசா என ஸ்விக்கி கூறி உள்ளது.
புதுடெல்லி
ஆண்டுதோறும் ஆர்டர்களின் அடிப்படையில் ஸ்விக்கி நிறுவனம் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவு வகைகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு 500 நகரங்களில் பெறப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 115 முறை ஆர்டர் செய்யும் அளவிற்கு முதல் இடத்தில் சிக்கன் பிரியாணி உள்ளது. 2021 ஆம் ஆண்டிலும் சிக்கன் பிரியாணி தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஆட்சி செய்து வருகிறது.4.25 லட்சத்துக்கும் அதிகமான புதிய பயனர்கள் ஆர்டர் செய்துள்ளனர்.
இது சென்னை, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஐதராபாத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது. ஆனால் மும்பையில் பருப்பு கிச்சிடி அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.இங்கு உண்மையில், பிரியாணியை விட சிக்கன் பிரைடு ரைஸ், மசாலா தோசை மற்றும் பூண்டு ரொட்டிகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன.
குருகிராமில் பிரியாணியை விட தால் மக்கானி மற்றும் மசாலா தோசை ஆகியவை டாப் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களில் உள்ளன.
மசாலா தோசையை விரும்பும் மற்றொரு வட இந்திய நகரம் லக்னோ ஆகும். கொல்கத்தாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் மட்டன் பிரியாணி மற்றும் வேகவைத்த மோமோஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
50 லட்சம் ஆர்டர்களுடன் சமோசாக்கள் அதிகம் சாப்பிடும் சிற்றுண்டியாக உள்ளது. 21 லட்சம் ஆர்டர்களுடன் இந்தியாவின் இரண்டாவது விருப்பமான சிற்றுண்டியாக பாவ்-பாஜி உள்ளது. அடுத்து குலாப் ஜாமூன் உள்ளது.
சைவ உணவு ஆர்டர்களில் 83 சதவீதம் அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story