குஜராத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று
குஜராத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் கொரோனா தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது.
இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 227 ஆக உள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் மீதமுள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story