ஆக்சிஜனை பயன்படுத்த சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி - மத்திய அரசு தொடங்கியது


ஆக்சிஜனை பயன்படுத்த சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி - மத்திய அரசு தொடங்கியது
x
தினத்தந்தி 23 Dec 2021 12:27 AM IST (Updated: 23 Dec 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஆக்சிஜனை திறம்பட பயன்படுத்துவது குறித்து சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு நேற்று தொடங்கியது.

புதுடெல்லி,

மருத்துவ ஆக்சிஜனை திறம்பட பயன்படுத்துவது குறித்து சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு நேற்று தொடங்கியது. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவீண் பவார் தொடங்கி வைத்தார்.

இதற்கு ‘தேசிய ஆக்சிஜன் பராமரிப்பு திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பாரதி பிரவீண் பவார் பேசியதாவது:-

கொரோனா 2-வது அலையின்போது, மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. அதன்மூலம் நிறைய பாடம் கற்றுக்கொண்டோம். ஆகவே, ஆக்சிஜனை திறம்பட பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காகவும், ஆக்சிஜனை வீணாக்குவதை தவிர்க்கவும் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story