அமித்ஷா, சோனியாவுக்கான பாதுகாப்பு பிரிவில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள்...
அமித்ஷா, சோனியாவுக்கான பாதுகாப்பு பிரிவில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர்
புதுடெல்லி,
பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த அரசியல் தலைவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த ஆண் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இதில் முதல் முறையாக பெண் கமாண்டோக்களும் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர். குறிப்பாக, இசட் பிளஸ் பாதுகாப்பை பெற்றிருக்கும் முக்கிய பிரபலங்களுக்கு இந்த பெண் கமாண்டோக்களும் இனிமேல் பாதுகாப்பு வழங்குவர்.
இந்தியாவில் உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் பலர் இந்த பாதுகாப்பை பெற்று வருகின்றனர். எனவே இவர்களுக்கான பாதுகாப்பு பணிகளில் பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்படுவர் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக 32 பெண் கமாண்டோக்கள் அடங்கிய முதல் பிரிவுக்கு 10 வார பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இவர்கள் மேற்படி பிரபலங்களின் வீடுகளில் முக்கியமாக பணியில் அமர்த்தப்படுவர். தேவைப்பட்டால் வருகிற 5 மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உள்பட வெளி பயணங்களிலும் இந்த தலைவர்களுடன் பெண் கமாண்டோக்களும் பாதுகாப்புக்காக உடன் செல்வார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த பெண் கமாண்டோக்கள் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் இந்த பணிகளில் இணைவார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Related Tags :
Next Story