மேற்கு வங்காளத்தில் ஒரே பள்ளியின் 29 மாணவர்களுக்கு கொரோனா
9, 10-ம் வகுப்பு பயிலும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கல்யாணியில் ஜவகர் நவோதயா வித்யாலயா உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 9, 10-ம் வகுப்பு பயிலும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. அவர்களுக்கு ஜலதோஷம், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகம், அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்லும்படியும், அங்கு தனிமைப்படுத்தும்படியும் கூறியுள்ளது.
29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story