பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி 10 பேர் காயம்


பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி 10 பேர் காயம்
x
தினத்தந்தி 23 Dec 2021 1:15 PM IST (Updated: 23 Dec 2021 2:19 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர்.

பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் திடீரென குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  குண்டு வெடிப்பில் 20 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிலிண்டர் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


Next Story