செல்போனை திருடியதாக மீனவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த கொடூர சம்பவம்!


செல்போனை திருடியதாக மீனவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த கொடூர சம்பவம்!
x
தினத்தந்தி 23 Dec 2021 6:00 PM IST (Updated: 23 Dec 2021 6:39 PM IST)
t-max-icont-min-icon

அவருடைய கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டி அவரை மேலாடை இல்லாமல் கிரேன் ஒன்றிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளனர்.

மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூருவில் செல்போனை திருடிச் சென்றதாக ஒரு மீனவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 

மீனவர் வைலா சீனு என்பவர் செல்போனை திருடியதாக கருதி சக மீனவர்கள் அவருடைய கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டி அவரை மேலாடை இல்லாமல் கிரேன் ஒன்றிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளனர்.

மேலும், அவரை அந்த 6 மீனவர்களும் சுற்றி நின்று கொண்டு திருடியதை ஒத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தினர்.

இந்த சம்பவத்தை படம்பிடித்த ஒருவர் அதனை வீடியோவாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 


26 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து மங்களூர் நகர போலீசார் அந்த மீனவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் என தெரியவந்துள்ளது. மீனவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மங்களூரு போலீஸ் கமிஷனர் என்.சசிகுமார் தெரிவித்தார்.

இந்த கொடூர சம்பவம் மங்களூருவின் தாக்கே கடற்கரை பகுதியில் உள்ள ஒரு படகில் நடந்துள்ளது. 

Next Story