டெல்லி: கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட சர்வதேச மோசடி கும்பல் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Dec 2021 6:51 PM IST (Updated: 23 Dec 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

இருவரிடமிருந்து 8 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லி,

டெல்லியின் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து போலீசாருக்கு கடந்த அக்டோபர் மாதம் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தனி குழு அமைத்து சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரிக்கத்தொடங்கினர். போலீசாரின் தீவிர தேடுதலில், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த பெரோஸ் ஷேக், 42, மற்றும் முபசுல் ஷேக், 52, ஆகியோர் கடந்த செவ்வாய் அன்று கைது செய்யப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் ஜஸ்மீத் சிங் தெரிவித்தார்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து டெல்லி மற்றும் டெல்லியை சுற்றிய பகுதிகளில் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் விட்டு வந்ததாக கூறினர். மேலும், கைதானவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் இன்று கள்ளநோட்டுக்களுடன் இருவரை கைது செய்தனர்.

இருவரிடமிருந்து 8 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சர்வதேச மோசடி கும்பல் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லியில் இதுவரை  2 கோடி வரையில்  கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டதாவும் தெரிவித்தனர்.

Next Story