மத்தியபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்..!
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு கொண்டுவரப்படுவதாக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.
போபால்,
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று தற்போது 250-ஐ தாண்டியுள்ளது . டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால், ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு கொண்டுவரப்படுவதாக மாநிலத்தின் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை நீடிக்கிறது.
இருப்பினும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் யாருக்கும் இதுவரை ஒமைக்ரான் வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story