இந்திய ராணுவத்தில் தகவல் பகிர்வுக்கு புதிய மொபைல் செயலி


இந்திய ராணுவத்தில் தகவல் பகிர்வுக்கு புதிய மொபைல் செயலி
x
தினத்தந்தி 24 Dec 2021 12:15 AM IST (Updated: 24 Dec 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ராணுவத்தில் தகவல் பகிர்வுக்கு புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்திய ராணுவத்தில் தங்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு ‘அவான்’ என்ற மொபைல் செயலி சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. 

இந்தநிலையில், எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டு, நவீன தொழில்நுட்பத்துடன் ‘அசிக்மா’ என்ற புதிய மொபைல் செயலியை ராணுவ அதிகாரிகள் குழு உருவாக்கி உள்ளது.  இந்த செயலியை நேற்று இந்திய ராணுவம் அறிமுகம் செய்தது. இது, பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் ஏராளமான சிறப்புகளை கொண்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

Next Story