ஒமைக்ரான் பரவல் எதிரொலி : மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகள்!
மராட்டியத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
மும்பை
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. .இதனால் மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது .மேலும் மாநிலங்கள் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது .
இந்நிலையில் மராட்டியத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் ,இன்று மராட்டியத்தில் இன்று மேலும் 20 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 108- ஆக உயர்ந்துள்ளது.இதனால் மராட்டிய மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது .
பொது இடங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை 5 பேருக்குமேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. .திருமண நிகழ்ச்சிகளில் உள் அரங்குகளில் 100 பேருக்கும் ,திறந்த வெளியில் 200 பேருக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .திரை அரங்குகள் ,உடற்பயிற்சி கூடம் ,ஸ்பாக்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story