டியூசன் சென்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
டியூசன் சென்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் மாவட்டம் சட்பூர் கிராமத்தை சேர்ந்த 10 வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை பக்கத்து கிராமத்தில் டியூசன் பயிற்சிக்காக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அந்த மாணவியை பின் தொடர்ந்த வந்த இரண்டு பேர் அவரை கிராமத்திற்கு அருகே உள்ள காட்டிற்குள் இழுத்து சென்றுள்ளனர். அங்கு மேலும் இரண்டு பேருடன் சேர்ந்துகொண்டு 4 பேரும் அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
டியூசன் சென்ற தனது மகள் வேகநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசாருடன் இணைந்து பெற்றோரும் மாணவியை தேடினர்.
அப்போது, கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த பள்ளி மாணவியை போலீசார் மீட்டனர். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story