பாஜக மற்றும் இந்தியாவை வலிமையாக்க உதவுங்கள்; கட்சி நிதிக்கு ரூ.1,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி..!


பாஜக மற்றும் இந்தியாவை வலிமையாக்க உதவுங்கள்; கட்சி நிதிக்கு ரூ.1,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி..!
x
தினத்தந்தி 25 Dec 2021 2:58 PM IST (Updated: 25 Dec 2021 2:58 PM IST)
t-max-icont-min-icon

சிறிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கி பாஜகவுக்கு உதவ வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

சிறிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கி  பாஜகவுக்கு உதவ வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட் பதிவில், “  பாஜகவின் கட்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடையாக நான் அளித்துள்ளேன்.  பாஜகவை வலுவாக்குவதற்கு தொண்டர்களும் நிதி  உதவி அளித்து உதவ வேண்டும். 

எப்பொழுதும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சித்தாந்தமும்,  வாழ்நாள் முழுவதும் தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்ற நமது தொண்டர்களின் கலாசாரமும்,  நீங்கள் அளிக்கும் சிறிய நன்கொடைகள் மூலம் மேலும் வலுப்பெறும். பாஜகவை வலுவாக்க உதவுங்கள்.. இந்தியாவை வலிமையாக்க உதவுகங்கள்” என பதிவிட்டுள்ளார். 

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவும் ஆயிரம் ரூபாய் நன்கொடையாக கட்சி நிதிக்கு அளித்துள்ளார். ஜேபி நட்டா இது பற்றி கூறுகையில், “ நமோ செயலி மூலம் பாஜகவை வலுவாக்க எனது பங்களிப்பை  அளித்துள்ளேன்” எனத்தெரிவித்துள்ளார். 


Next Story