ராஜஸ்தானில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு


ராஜஸ்தானில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2021 6:08 PM IST (Updated: 25 Dec 2021 6:08 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெய்பூர், 

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா, இந்தியாவிலும் ஊடுருவியது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 413- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய  மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக உள்ளது. 

இந்த நிலையில், ராஜஸ்தானில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. ஜெய்பூரில் 11 பேரும், அஜ்மீரில் 6 பேரும், உதய்பூரில் 3 பேரும் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  


Next Story