விவசாய அமைப்புகள் சார்பில் கட்சி: பஞ்சாப் அரசியலில் புதிய திருப்பம்


விவசாய அமைப்புகள் சார்பில் கட்சி: பஞ்சாப் அரசியலில் புதிய திருப்பம்
x
தினத்தந்தி 25 Dec 2021 6:52 PM IST (Updated: 25 Dec 2021 7:00 PM IST)
t-max-icont-min-icon

புதிய அரசியல் கட்சிக்கு பல்பீர் சிங் ராஜேவால் தலைமை தாங்குகிறார். கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராகவும் இவரே முன் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர், 

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் தேர்தலில்  ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங்கின் லோக் பஞ்சாப் காங்கிரஸ்- பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், புதிய திருப்பமாக 22 விவசாய அமைப்புகள் சார்பில் என்ற புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளது. 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக  போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் ஒரு அங்கமாக இருந்த சுமார் 22 விவசாயிகள் சங்கங்கள், ஒன்றாக இணைந்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற அரசியல் கட்சியை தொடங்கி போட்டியிட முடிவு செய்துள்ளன.

இந்த புதிய அரசியல் கட்சிக்கு பல்பீர் சிங் ராஜேவால் தலைமை தாங்குகிறார்.  கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராகவும் இவரே முன் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story