டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 249- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 249- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோன தொற்று பாதிப்பு டெல்லியில் அதிகரித்துள்ளது.
நேற்றைவிட 38 சதவீதம் அதிகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,104- ஆக உயர்ந்துள்ளது. டிசம்பரில் மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் நேற்று 180- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தொற்று பாதிப்பு விகிதம் 0.29 சதவிகிதமாக உள்ளது. டெல்லியில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தினசரி பாதிப்பு 255 ஆக இருந்தது. அதன்பிறகு இன்றுதான் அந்த அளவுக்கு ஒருநாள் பாதிப்பு பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story