பூஸ்டர் டோஸ், சிறுவர்களுக்கு தடுப்பூசி: உத்தவ் தாக்கரே வரவேற்பு
பூஸ்டர் டோஸ் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற மோடி அறிவிப்புக்கு உத்தவ் தாக்கரே வரவேற்று உள்ளார்.
மும்பை,
பூஸ்டர் டோஸ் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற மோடி அறிவிப்புக்கு உத்தவ் தாக்கரே வரவேற்று உள்ளார்.
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார்.
இதேபோல் ஜனவரி 10-ந்தேதி முதல் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் இந்த முடிவு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவும். பூஸ்டர் டோஸ் வழங்குவது இணை நோயால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கும் உதவும்.
மாநில சுற்றுச்சூழல் மந்திரி ஆதித்ய தாக்கரே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும், பூஸ்டர் டோஸ் வழங்கவும் கோரி மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு டிசம்பர் 7-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார். பூஸ்டர் டோசின் அவசியம் குறித்து சமீபத்திய மாநில அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story