“ராகுல் காந்தி இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்தவரா” - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து


“ராகுல் காந்தி இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்தவரா” -  பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து
x
தினத்தந்தி 26 Dec 2021 3:50 AM GMT (Updated: 26 Dec 2021 3:50 AM GMT)

ராகுல் காந்தி இந்துவா இஸ்லாமியரா அல்லது கிறிஸ்துவ மதத்தவரா என்பது அவருக்கே தெரியவில்லை.

அம்பாலா, 

அரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ அசீம் கோயல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியை பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.  

ராகுல் காந்தியை பற்றி அவர் கூறியிருப்பதாவது:-

“ராகுல் காந்தி இந்துவா இஸ்லாமியரா அல்லது கிறிஸ்துவ மதத்தவரா என்பது அவருக்கே தெரியவில்லை.

இதுகுறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டும்.

அவர் நாட்டை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. ஆனால், அவருடைய குடும்பத்தின் வரலாற்றை குறித்து தான் கவலை அடைய வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக ராகுல் காந்தி இந்து மற்றும் இந்துத்துவா ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு  சமீபத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவர் ‘இந்துக்கள் உண்மையின் வழியை பின்பற்றுகிறவர்கள், அதேசமயம் இந்துத்துவா, மதம் என்ற போர்வையில் கொள்ளையடிக்கிறது’ என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
அரியானாவின் அம்பாலா நகர தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அசீம் கோயல், ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story