குஜராத்; கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கொரோனா விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு


குஜராத்; கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கொரோனா விதிமுறைகளை மீறியதாக  வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 26 Dec 2021 5:05 PM IST (Updated: 26 Dec 2021 5:05 PM IST)
t-max-icont-min-icon

சூரத் நகரில் இதுவரை 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூரத்,

குஜரத்தின் சூரத் நகரில்  கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில்  கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சமூக இடைவெளிகளை மீறுதல் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பீகார் போலீசார் தெரிவித்தனர்.  சூரத் நகரில் இதுவரை 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக குஜராத்தின் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, ஜுனகாத், ஜாம்நகர், பவாநகர், காந்தி நகர் உள்ளிட்ட நகரங்களில் சனிக்கிழமை முதல் இரண்டு மணி நேரம் இரவு  ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 


Next Story