இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எவ்வளவு கால இடைவெளியில் போடப்படும் ?
மத்திய அரசின் தடுப்பூசி தொழில்நுட்பக் குழு பூஸ்டர்அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் எத்தனை மாத இடைவெளியில் செலுத்தலாம் என்பது குறித்துஆலோசித்து வருகிறது.
புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கடந்த 2 ஆம் தேதி ஊடுருவிய ஒமைக்ரான் தற்போது 422 பேரை பாதித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் தடுப்பூசி தொழில்நுட்பக் குழு பூஸ்டர்அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் எத்தனை மாத இடைவெளியில் செலுத்தலாம் என்பது குறித்துஆலோசித்து வருகிறது. அதுகுறித்த அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் “ இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னெச்சரி்க்கை தடுப்பூசி செலுத்த கால இடைவெளி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 2-டோஸ் தடுப்பூசி செலுத்தியபின் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த குறைந்தபட்சம் 9 முதல் 12 மாத இடைவெளி தேவைப்படும் என்று கூறப்படுகிறது” எனத் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story