கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் இல்லை


கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் இல்லை
x
தினத்தந்தி 27 Dec 2021 12:44 AM IST (Updated: 27 Dec 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புத்தாண்டு நெருங்கும் நிலையில் மாநில அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் புத்தாண்டு நெருங்கும் நிலையில் மாநில அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இதற்கு உணவகம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் தான் தங்களின் வியாபாரம் நன்றாக நடைபெறும் என்றும், இந்த நேரத்தில் ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும் இரவு நேர ஊரடங்கை வாபஸ் பெறுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கோாிக்கை விடுத்துள்ள அவர்கள், கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம் என்றும் அவா்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்புகள் உண்டாகும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் வைரஸ் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இரவு நேர ஊரடங்கை வாபஸ் பெற மாட்டோம்" என்றார்.

Next Story