இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்வு...!
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும் நாளுக்குநாள் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மராட்டியத்தில் நேற்று புதிதாக 31 பேருக்கு ஒமைக்ரான் உறுதி ஆனது. இதனால் அங்கு ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கேரளாவில் 19 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் புதிதாக 3 பேருக்கும், ஆந்திராவில் 2 பேருக்கும், ஒடிசாவில் 4 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி டெல்லியில் 142 பேருக்கும், மராட்டியத்தில் 141 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 41 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், ஆந்திராவில் 6 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 6 பேருக்கும், அரியானாவில் 4 பேருக்கும், ஒடிசாவில் 4 பேருக்கும், சண்டிகாரில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், உத்தரகாண்டில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 142 பேரில் இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
COVID19 | India reports 6,531 new cases and 7,141 recoveries reported in the last 24 hours. Active caseload currently stands at 75,841. Recovery Rate currently at 98.40%
— ANI (@ANI) December 27, 2021
Omicron case tally stands to 578. pic.twitter.com/Am7MvokCm9
Related Tags :
Next Story