மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்து - சாமியார் மீது வழக்குப்பதிவு
மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்,
மத்தியபிரதேசம் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று இந்து மதம் தொடர்பான மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மராட்டியத்தை சேர்ந்த காளிசரண் மகாராஜா என்ற சாமியாரும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய காளிசரண் சாமியார் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
இது தொடபாக அவர் கூறுகையில், மதத்தை காப்பதே நமது முதல் கடமை. எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அரசில் நாம் இந்து மத தலைவரை தேர்தெடுக்கவேண்டும். நமது வீட்டில் உள்ள பெண்கள் மிகவும் சிறப்பானவர்கள், நாகரீகமானவர்கள். அவர்கள் தேர்தலில் வாக்களிக்க செல்வதில்லை. கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நடைபெறும்போது உங்கள் குடும்ப பெண்களுக்கு என்ன ஆகும்... முட்டாள்கள்...! வாக்களிக்க வெளியே செல்லாதவர்களை நான் அழைக்கிறேன்.
அரசியல் மூலம் நாட்டை கைப்பற்றுவதே இஸ்லாமின் நோக்கம். 1947 ஆம் ஆண்டு நமது கண்முன்னே அவர்கள் கைப்பற்றினார்கள் (இந்தியா பாகிஸ்தான் பிரிவு) அவர்கள் முன்னதாக ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை கைப்பற்றினார். வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் அவர்கள் அரசியல் மூலம் கைப்பற்றினர். காந்தியை கொன்றதற்காக நாதுராம் கோட்சேவை வணங்குகிறேன்’ என்றார்.
இந்நிலையில், மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சாமியார் காளிசரண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story