சுகாதார செயல்திறனுக்கான தரவரிசை பட்டியல்- தமிழகத்திற்கு 2-ம் இடம்


சுகாதார செயல்திறனுக்கான தரவரிசை பட்டியல்- தமிழகத்திற்கு 2-ம் இடம்
x
தினத்தந்தி 27 Dec 2021 3:18 PM IST (Updated: 27 Dec 2021 3:18 PM IST)
t-max-icont-min-icon

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார செயல்திறனுக்கான தரவரிசை பட்டியலில் தமிழகத்திற்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது.

புதுடெல்லி,

சுகாதார செயல் திறனுக்கான தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தமிழகம் 2- ஆம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தை கேரளா பிடித்துள்ளது. பட்டியலில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது.  2019-20 ஆண்டு கால கட்டத்தை கணக்கில் கொண்டு இந்த தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப்பட்டியலில் தெலுங்கானா 3 ஆம் இடத்தில் உள்ளது. 

சிறிய மாநிலங்களில், ஒட்டுமொத்த செயல்திறனிலும், அதிகரிக்கும் செயல்திறனிலும் மிசோரம் சிறந்த மாநிலமாக தேர்வாகியுள்ளது.  அதே சமயம் யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் கடைசி இடங்களில் உள்ளன. அதேவேளையில்,  அதிகரிக்கும் செயல்திறனின் இந்த யூனியன் பிரதேசங்கள் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளன. 


Next Story