அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது - மம்தா குற்றச்சாட்டு
அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொல்கத்தா,
இந்தியாவில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மேற்குவங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் செயல்பட்டு வரும் அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனங்களில் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது என்பதை கிறிஸ்துமஸ் அன்று கேட்க மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
22 ஆயிரம் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் இன்றி தவிக்கவிடப்பட்டுள்ளனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளில் சமரசம் செய்யக்கூடாது' என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் குற்றஞ்சாட்டுகளுக்கு அன்னை தெரசா தொண்டு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தங்கள் தொண்டு நிறுவனத்தின் எந்த வங்கி கணக்கும் முடக்கப்படவில்லை என அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தில் செய்தித்தொடர்பாளர் சுனிதா குமார்
இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் தொண்டு நிறுவனத்தில் வங்கி கணக்கு முடக்கம் தொடர்பாக இதுவரை எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. இந்திய அரசும் இது தொடர்பாக எங்களிடம் எதுவும் கூறவில்லை. எங்கள் தொண்டு நிறுவனத்தில் வங்கி பரிவர்த்தனைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது’ என்றார்.
Related Tags :
Next Story