நாசாவின் ஜேபிஎல் நிறுவனத்தில் விண்வெளி பயிற்சி பெற்ற ஆந்திர மாணவி..!


நாசாவின் ஜேபிஎல் நிறுவனத்தில் விண்வெளி பயிற்சி பெற்ற ஆந்திர மாணவி..!
x
தினத்தந்தி 27 Dec 2021 8:31 PM IST (Updated: 27 Dec 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

உலகளவில் தேர்வு செய்யப்பட்ட 20 பேரில் ஒருவராகவும், முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஹைதராபாத்,

ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரியை அடுத்தபாலகொல்லுவைச் சேர்ந்த மாணவி ஜான்வி. இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

19 வயதான ஜான்வி, அமெரிக்காவிலுள்ள நாசாவின் லாஞ்ச் ஆபரேஷன்ஸ் கென்னடி விண்வெளி மையத்தில், சர்வதேச வான் மற்றும் விண்வெளி திட்டத்தில் பங்கு பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலகளவில் தேர்வு செய்யப்பட்ட  20 பேரில் இவரும் ஒருவர்.

இது கென்னடி விண்வெளி மையத்திதால் நடத்தப்படும் விண்வெளி வீரர் என்ற திட்டத்தை கொண்டது. இங்கு பூஜ்ஜிய ஈர்ப்பு விசை, பல்வகையான வான்வெளி பயிற்சி மற்றும் நீருக்கடியில் ராக்கெட் ஏவுதல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. இதில் கலந்துகொண்ட ஜான்விக்கு முதல் முறையாக விமானத்தில் பறக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

மேலும் அவர் 'டீம் கென்னடி' என்ற 16 பேர் கொண்ட குழுவின் பணி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.  அவரது வழிகாட்டுதலில் குழுவானது ஒரு மினியேச்சர் ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி தரையிறக்கியது.

பன்முகத் திறன் கொண்ட பெண்ணாக இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஜான்வி ஒரு பேட்டியில் கூறும்போது, நான் நாசாவின் ஜேபிஎல் நிறுவனத்தில் விண்வெளி பயிற்சி பெற்றது மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகள் புரிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story