தெலுங்கானா எல்லையில் 4 பெண் நக்சல்கள் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை
தெலுங்கானா மாநில எல்லையில் நக்சலைட்டுகள் மற்றும் காவல்துறை இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 4 பெண் நக்சலைட்டுகள் உள்பட 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில எல்லையில் நக்சலைட்டுகள் மற்றும் காவல்துறை இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 4 பெண் நக்சலைட்டுகள் உள்பட 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநில எல்லையில், அடர்ந்த வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தீஸ்கர் மாநில காவல்துறையினரும் துணை ராணுவ படையினருடன் அப்பகுதியில் இன்று காலை கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் அரை மணி நேரம் நீடித்த சண்டையில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 4 பேர் பெண்கள் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நக்சலைட்டுகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story