பாம்பு என்னை மூன்று முறை கடித்தது: கூறுகிறார் சல்மான் கான்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Dec 2021 9:59 PM IST (Updated: 27 Dec 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான், அறைக்குள் புகுந்த பாம்பு தன்னை 3 முறை கடித்ததாக தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் சல்மான்கானுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் சல்மான் கானின் பிறந்த நாள் கொண்ட்டத்தில் அவரது குடும்பத்தினர்  இந்த பண்ணை வீட்டில் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று பன்வேல் பண்ணை இல்லத்தில் வைத்து சல்மான் கானை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து உடனடியாக கமோதேவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அவர் தனது பண்ணை வீட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு பாம்பு என் பண்ணை வீட்டில் நுழைந்தது. நான் அதை ஒரு குச்சியைப் பயன்படுத்தி வெளியே எடுத்தேன். படிப்படியாக அது என் கையை எட்டியது. தொடர்ந்து அது என்னை மூன்று முறை கடித்தது. அது ஒரு வகையான விஷப்பாம்பு. நான் 6 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தேன். இப்போது நலமாக இருக்கிறேன். எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story