அஜித்பவாருக்கு வாகனம் ஓட்டிய பெண் போலீஸ் மந்திரிகள் பாராட்டு


அஜித்பவாருக்கு வாகனம் ஓட்டிய பெண் போலீஸ் மந்திரிகள் பாராட்டு
x
தினத்தந்தி 28 Dec 2021 1:17 AM IST (Updated: 28 Dec 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

பெண் போலீசாக பணியாற்றி வருபவர் திருப்தி முலிக். அவர் போலீஸ் துறையின் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

மும்பை, 

பெண் போலீசாக பணியாற்றி வருபவர் திருப்தி முலிக். அவர் போலீஸ் துறையின் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரிந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசாக பணியாற்றி வந்த இவர், கடந்த 23-ந் தேதி வி.ஐ.பி. பாதுகாப்பு வாகன ஓட்டுனர் பயிற்சியை முடித்தார். இந்த நிலையில் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சமீபத்தில் சித்துதுர்க் மாவட்டத்தில் தனது அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது துணை முதல்-மந்திரி அஜித் பவார், சிந்துதுர்க் மாவட்ட பொறுப்பு மந்திரி உதய் சமந்த் மற்றும் மந்திரி சதேஷ் பாட்டீல் ஆகியோர் பயணித்த வாகனத்தை ஓட்டும் பணி திருப்தி முலிக்கிற்கு வழங்கப்பட்டது. அப்போது அவரின் வாகனம் ஓட்டும் திறமை மந்திரிகளை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் மந்திரி சதேஜ் பாட்டீல் தனது டுவிட்டர் பக்கத்தில், 3 மந்திரிகளுடன் திருப்தி முலிக் கார் ஓட்டும் புகைப்படத்தை பகிர்த்துக்கொண்டார்.

மேலும், “சிறுவயதில் இருந்தே வாகனம் ஓட்டுவதை விருப்பமாக கொண்ட திருப்தி முலிக் போலீஸ் துறையின் மோட்டார் வாகன பிரிவில் பணி புரிந்து வருகிறார். அவர் வாகனம் ஓட்டும் திறமை இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Next Story