கான்பூர் மெட்ரோ ரெயில் சேவை: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
கான்பூர் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
கான்பூர்,
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு பயணம் செய்கிறார். கான்பூர் செல்லும் அவர் இன்று அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
கான்பூர் ஐஐடியின் 54வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவது பிரதமர் மோடியின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்கிறார். கான்பூரில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முழு நீளம் 32 கிமீ ஆகும், மேலும் ரூ.11,000 கோடி செலவில் இந்த திட்டம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 356 கிமீ நீளமுள்ள இந்த திட்டம் ஆண்டுக்கு சுமார் 3.45 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்டது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை நீட்டிக்கப்பட்ட இந்தத் திட்டம் ரூ,1500 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலிய பொருட்களை அணுகுவதற்கு பிராந்தியத்திற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story