கொரோனா பரவல் அதிகரிப்பு: டெல்லியில் பள்ளிகள், தியேட்டர்கள் மூட உத்தரவு
மெட்ரோ ரெயில், உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட உள்ளது.
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ, உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு;
*டெல்லியில் இரவு ஊரடங்கு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்.
*அத்தியாவசிய சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
*திருமண நிகழ்வுகளில் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
அதேபோல், இறுதிச்சடங்குகளிலும் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
*வணிக வளாகங்கள், கடைகள் ஒற்றப்படை - இரட்டைப்படை தேதிகள் அடிப்படையில் இயங்க அனுமதிக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி உண்டு.
*ஆன்லைன் டெலிவரிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தனியாக இருக்கும் கடைகள் ஒற்றைப்படை - இரட்டைப்படை தேதிகள் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியதில்லை. மத அரசியல் கூட்டங்கள் செயல்பட அனுமதி கிடையாது.
Related Tags :
Next Story