கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,474- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,474- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,474- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 3,052 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று விகிதம் 4.08 சதவிகிதமாக உள்ளது. பாதிப்பைக் கண்டறிய 60,597- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,400- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47, 066- ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் எர்ணாகுளத்தில் 419- பேரும் திருவனந்தபுரத்தில் 405- பேரும்,கோழிக்கோடு மாவட்டத்தில் 273- பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story