தெலுங்கானாவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
தெலுங்கானா,
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் ஒமைக்ரான் மொத்த எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story