பிரதமர் மோடியின் அமீரகப் பயணம் ஒத்திவைப்பு


பிரதமர் மோடியின் அமீரகப் பயணம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 29 Dec 2021 4:10 PM IST (Updated: 29 Dec 2021 4:10 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரக பயணம் மேற்கொள்ள உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. 

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம்  இடையேயான தூதரக ரீதியிலான  உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை இருநாடுகளும் கொண்டாடும் நிலையில், பிரதமர் மோடி, 2022- ஆம் ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருப்பதாகவும்மோடியின் பயணத்திட்டத்திற்கான நிகழ்ச்சி நிகரலை அதிகாரிகள் தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.

 இந்த நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் மோடியின் அமீரக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story