சிக்கிம் தலைநகரில் இருந்து சீன எல்லை செல்லும் சாலைக்கு மோடி பெயர் - கவர்னர் சூட்டினார்
சிக்கிம் தலைநகரில் இருந்து சீன எல்லை செல்லும் சாலைக்கு பிரதமர் மோடி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து அந்த மாநிலத்தின் சீன எல்லைப்பகுதியான நாதுலாவுக்கு செல்லும் சாலைக்கு நரேந்திர மோடி மார்க் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. மாநில கவர்னர் கங்கா பிரசாத், இந்த பெயரை சூட்டி பெயர்ப்பலகையை திறந்து வைத்தார்.
தேசிய நெடுஞ்சாலை 310-ல் இந்த தேசிய நினைவுச்சின்னத்தை எல்லை சாலை அமைப்பு உருவாக்கி இருப்பதகவும், இதன் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் எளிதில் நாதுலா எல்லையை அடைய முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்த சாைலக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டியதை பெருமையாக கருதுவதாக கூறிய கங்கா பிரசாத், இது சுற்றுலாவை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவும் உதவும் என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story