2019-20-ம் நிதியாண்டின் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு
2019-20-ம் நிதியாண்டின் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
புதுடெல்லி,
டிஜிட்டல் கையொப்பம் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் வருமான வரி தாக்கல் செய்வோர், 120 நாட்களுக்குள் அதை சரிபார்க்க வேண்டியது விதியாகும். ஆதார், நெட்-பேங்கிங், ஏ.டி.எம். என இதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
ஆனால் 2020-21-ம் மதிப்பீட்டு ஆண்டில் (2019-20 நிதியாண்டு) இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட பல கோப்புகள் இன்னும் மதிப்பீடு செய்யாமல் நிலுவையில் இருக்கின்றன. எனவே இவற்றை சரிபார்த்தலுக்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் ெவளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story