குஜராத்தில் நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய வாலிபர்
தீர்ப்பு கூறப்பட்டதும் ஆத்திரமடைந்த சுஜித் சாகேட், தனது காலணியை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார்.
சூரத்,
குஜராத் மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரித்த போலீசார், மத்தியபிரதேசத்தை சேர்ந்த சுஜித் சாகேட் என்ற 27 வயது வாலிபரை கைது செய்தனர்.
அவர் சாக்லேட் தருவதாக கூறி சிறுமியை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. அந்த வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சூரத் போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி பி.எஸ்.காலா, குற்றவாளி சுஜித் சாகேட் தனது மீதமுள்ள ஆயுட்காலம் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு கூறப்பட்டதும் ஆத்திரமடைந்த சுஜித் சாகேட், தனது காலணியை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார்.அது இலக்கு தவறி, சாட்சிக்கூண்டின் அருகே விழுந்தது.
இந்த சம்பவம் கோர்ட்டில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story